வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தமிழ்நாட்டில் புதிதாக 1,830 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,830 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 24 பேர் உயிரிழந்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூலை 2021, 2:09 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,830 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 24 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

 இதனால், இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,44,870-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 29 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,868-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 2,516 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை  24,86,192-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,35,008 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.