தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

வேதாரண்யம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆயக்காரன்புலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸர்.
Updated On :11 ஜூன் 2021, 7:42 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம், ஆயக்காரன்புலம் ஆகிய ஊர்களில் செயல்படும் 4 பெட்ரோல் பங்குகள் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்தவும், பெரும் நிறுவனங்களுக்கு சாதகமான நிலைபாட்டை கொண்டுள்ளதாக மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Story image

வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸர்.

வேதாரண்யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்ராஜ் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆரோ.பால்ராஜ், நகரச் செயலாளர் வைரவன், இளைஞர் காங் மாவட்ட துணைத் தலைவர் ஆப்கான், நிர்வாகிகள் மருதூர் கணேசன், சோட்டா பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆயக்காரன்புலத்தில் வட்டாரத் தலைவர் ஆர்.ஜெகநாதன், ஊராட்சி மன்றத் தலைவி சத்தியகலா, நிர்வாகிகள் ஆதித்தன், சந்திரசேகரன், ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.