தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மானாமதுரையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை மற்றும் எரிவாயு உருளை விலைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தக் கோரி மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
Updated On :11 ஜூன் 2021, 7:15 am

DIN


மானாமதுரை: பெட்ரோல், டீசல் விலை மற்றும் எரிவாயு உருளை விலைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தக் கோரி மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பஸ் நிலையம் அருகேயுள்ள  பெட்ரோல் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மானாமதுரை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம். கணேசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில எஸ்.சி பிரிவு துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், வட்டாரத் தலைவர் கே. கணேசன், மானாமதுரை சட்டப்ரேவைத் தொகுதி பொறுப்பாளர் ஏ.சி. சஞ்சய், வழக்கறிஞர்கள் பிரிவு எம்.முத்துக்குமார், ரமேஷ்கண்ணன்,  காங்கிரஸ் மாவட்ட இணைச் செயலாளர்கள் பி. புருஷோத்தமன், மகாலிங்கன், காசி மாவட்ட துணைத் தலைவர் காசிராஜன் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் மத்திய ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி ராஜாராம், திருப்புவனம் கிழக்கு வட்டாரத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.