டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தில்லியில் வாகன விபத்தில் பலியான ராணுவ வீரர் உடல் அடக்கம்

புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் உடல்,  அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.  

News image
வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபாகரன் உடலுக்கு மனைவி, மகள்கள் அஞ்சலி செலுத்தும் கண்ணீர் காட்சி.
Updated On :28 ஜனவரி 2024, 3:25 am

DIN


கம்பம்: புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் உடல்,  அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தேசிய கொடியை போர்த்தி மரியாதை செய்யப்பட்டு புதன்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆர்.பிரபாகரன் (33). இவர் புதுதில்லியில் ராணுவ படை பிரிவில் ஹவில்தாராக உள்ளார். இவர் ஜூன் 15 ஆம் தேதி அதிகாலையில்  பணி முடித்துவிட்டு ராணுவ குடியிருப்புக்கு மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது தில்லி கண்ட் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் இருந்த கல் மீது பைக் மோதி, நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

Story image

இறந்த ராணுவ வீரர் பிரபாகரன் உடலுக்கு மரியாதை செலுத்திய ராணுவ வீரர்கள்.

இதில், ராணுவ வீரர் பிரபாகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. தகவல் அறிந்து சக ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிரபாகரனை மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் ராணுவ வீரர் இறந்ததை உறுதி செய்தனர்.

இதுபற்றி ராணுவ வீரர் மனைவி திவ்யா மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து ராணுவ தலைமை இடத்திலேயே உயிரிழந்த ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினார்.

Story image

கம்பத்தில் ராணுவ வீரர் பிரபாகரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் ராணுவ வீரர் உடலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வழியாக  திருச்சிக்கு கொண்டு வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதன்கிழமை அதிகாலையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்பு சுருளிப்பட்டி சாலையில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் தேசிய கொடியை போர்த்தி மரியாதை செய்தனர்.

அதன் பின்பு உடல் எரியூட்டப்பட்டது, மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் ஆய்வாளர் ஹ.செந்தில் குமார் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.