கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தடைந்தது!
ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து தெலங்கு கங்கை கால்வாயில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் புதன்கிழமை தமிழகத்தை வந்தடைந்தது.

கண்டலேறு அணையிலிருந்து தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நீரை மலர்தூவி வரவேற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர்.









