தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மானாமதுரை அருகே லாரி மோதி பைக்கில் வந்த போலீஸ்காரர் சாவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போலீஸ்காரர் லாரி மோதி உயிரிழந்தார்.

News image
லாரி மோதி உயிரிழந்த போலீஸ்காரர் கண்ணன்
Updated On :16 ஜூன் 2021, 5:15 am

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போலீஸ்காரர் லாரி மோதி உயிரிழந்தார்.

மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் கண்ணன்(33), இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணி செய்து வந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் பரமக்குடியிலிருந்து  கீழப்பசலை  கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

மானாமதுரை அருகே மேலப்பசலை  என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக கண்ணன் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.