திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சாா்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.


சாா்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வௌிநாட்டில் இருந்து வரும் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சாா்ஜாவிலிருந்து இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முகாமிட்டு காத்திருந்தனர். அப்போது ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளில், சந்தேகத்திற்கு இடமான 6 பேரை தனியாக அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.3 கோடி மதிப்பிலான சுமார் 6 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் தீவிர தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...