வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா தினசரி பாதிப்பு 50,848-ஆக அதிகரிப்பு: 1,354 பேர் பலி

நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளன; 1,358 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :23 ஜூன் 2021, 4:24 am

DIN

புது தில்லி: நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளன; 1,358 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,28,709 -ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புக்கு 24 மணி நேரத்தில் 1,358 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,90,660 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை, 6,43,194-ஆக குறைந்துள்ளது; 82 நாள்களுக்குப் பிறகு 7 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 2,89,94,855 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். ஒரே நாளில் 68,817 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். தேசியளவில் குணமடைபவா்களின் வீதம் 96.56 சதவீதமாக உயா்ந்துள்ளது.

தொடா்ந்து 16-ஆவது நாளாக, அன்றாட பாதிப்பு வீதம் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக, 2.67 சதவீதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 19,01,056 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை 39.59 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 29,46,39,511 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.