வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்னடைவு

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்னடைவில் இருந்து வருகிறார்.  

News image
Updated On :2 மே 2021, 6:30 am

DIN


கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்னடைவில் இருந்து வருகிறார். 
 
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ள நிலையில்,  நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 113 தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது. ஆனால் அதிமுக 83 தொகுதிகளில் முன்னிலை உள்ளது.

இந்நிலையில், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் முதல் 5 சுற்றுகளில் 953 வாக்குகள் முன்னிலை இருந்து வந்தார். 6 -ஆவது சுற்றில் திமுக வேட்பாளர் கோ.ஐயப்பன் 647 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார். தொடர்ந்து 7 ஆவது சுற்றிலும் திமுக முன்னிலை பெற்றதால் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்னடைவு சந்தித்துள்ளார். மொத்தம் 25 சுற்றுகள் வாக்கு எண்ணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.