தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மே 11-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். 

News image
சென்னை கலைவாணர் அரங்கம்.
Updated On :8 மே 2021, 9:28 am

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழக  16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3-ஆவது தளத்தில் நடைபெறுகிறது. 

அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்பினர்கள் பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர். 

தேர்தல் வெற்றி சான்றிதழை தவறாமல் உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும்.

12 ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் 12 -ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.