பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆப்பக்கூடலில் கரோனாவுக்கு கணவன் பலி:  பாதிக்கப்பட்ட மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

பவானி அருகே கரோனா பாதிப்பால் கணவன் உயிரிழந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட மனைவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

News image
திருப்பூர் அருகே தாய், மகன், மகள் தற்கொலை 
Updated On :20 மே 2021, 7:59 am

DIN

பவானி:  பவானி அருகே கரோனா பாதிப்பால் கணவன் உயிரிழந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட மனைவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல், நான்குசாலை பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி சம்தாவதி (58). இவரும், ஆப்பக்கூடலில் சைக்கிள் ஸ்டேண்ட் வைத்து நடத்தி வந்தனர். இவரது மகன் யுவராஜ், கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், செங்கோட்டையன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் தேதி செங்கோட்டையன் உயிரிழந்தார். கோவையிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், 18-ஆம் தேதி சம்தாவதி ஆப்பக்கூடல் திரும்பினார். 

இங்கு, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது சம்தாவதியும் கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், மனமுடைந்த சம்தாவதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.