இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாகைக்கு வருகை தந்த அவர், நாகை இ.ஜி. எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில், இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். அப்போது, அந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெறும் கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ச்சியாக, நாகை நகராட்சிக்குள்பட்ட டாடா நகர் சமுதாயக் கூடத்தில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவ வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.