லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை மிரட்டினாரா முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்?

விழுப்புரத்தில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விழுப்புரத்தில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ”லஞ்ச ஒழிப்புத்துறையினர் எங்கும் லஞ்சம் வாங்குவதே இல்லையா? தற்போது அதிகாரிகளுக்கு சொத்துக்கள் எப்படி சேர்ந்தது? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஆட்சி அப்படியே இருக்கப் போவதில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமையும் அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சட்டையைக் கழற்றுவோம். காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையிலான முன்னாள் அமைச்சரின் இந்தக் கருத்து தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com