ஸ்வீடனில் கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்

ஸ்வீடன் நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கரோனா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஸ்வீடனில் கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்
ஸ்வீடனில் கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்

ஸ்வீடன் நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கரோனா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

உலகின் பல நாடுகளிலும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துவருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களைக் கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் லீனா ஹாலன்கிரேன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தங்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.

ஸ்வீடன் நாட்டில் இதுவரை கரோனா தொற்று பரவலால் 11,86,387 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,075 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com