கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

'எதற்கும் துணிந்தவன்': நாளை புதிய அப்டேட்டுடன் வருகிறார் சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 1:29 pm

DIN


பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சூர்யா நடித்து தயாரித்து வெளியான ஜெய் பீம் படம் தமிழகம் மட்டுமின்றி, மாநிலத்தின் வெளியேவும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, படத்தில் இடம்பெற்ற காட்சி மாற்றியமைக்கப்பட்ட பிறகும், அதுகுறித்த சர்ச்சை இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

சூர்யாவின் படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படாது என்கிற அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும், இந்த விவகாரத்தில் திரைத் துறையினர், அரசியல் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் நடிகர் சூர்யாவுடன் துணை நிற்பதாக தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். 

சர்ச்சைகளின் தொடர்ச்சியாக அவரது வீட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், அவரது அடுத்தப் படமான 'எதற்கும் துணிந்தவன்' குறித்த புதிய அப்டேட் நாளை பகல் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.