முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்
By DIN | Published On : 22nd October 2021 05:35 PM | Last Updated : 22nd October 2021 05:35 PM | அ+அ அ- |

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சிலையை முறையாகப் பராமரிக்கக் கோரியதற்கு உரிய உத்தரவாதத்தை அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 பேர் பலி
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சிலை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
எனது கோரிக்கையை ஏற்று, மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள "மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக அரசு சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும்" என்ற உத்தரவாதத்தை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் மூலம் தெரிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! pic.twitter.com/VXLWO73GA2
— O Panneerselvam (@OfficeOfOPS) October 22, 2021
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், “மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக அரசு சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும்" என்ற உத்தரவாதத்தை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் மூலம் தெரிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.