சென்னையில் திடீர் கனமழை
By DIN | Published On : 30th June 2022 09:54 PM | Last Updated : 30th June 2022 09:54 PM | அ+அ அ- |

சென்னையில் திடீர் கனமழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா தொற்று
அண்ணாநகர், திருமங்கலம், அம்பத்தூர், வடபழனி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரங்களில் வேலை முடித்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...