
தமிழகத்தில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,827 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,75,185 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | புவி வெப்பமயமாதல் கொண்டுவரும் புதிய சிக்கல்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
மேலும் 1008 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,26,065 பேர் குணமடைந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 38,026 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 11,094 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...