ஹாங்ஸெள: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 12 ஆவது நாளான புதன்கிழமை, கலப்பு இரட்டையர் நடைப்போட்டியில் இந்தியாவுக்கான ராம் பாபூ, மஞ்சு ராணி இணை வெண்கலம் வென்று புதிய சாதனை படைத்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் புதன்கிழமை, கலப்பு அணிப்பிரிவு 35 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் இந்தியாவின் ராம் பாபூ, மஞ்சு ராணி இணை 5 மணி நேரம் 51 நிமிடத்தில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றனர்.
ராம் பாபூ நான்காவது இடத்தைப் பிடித்தார், மஞ்சு ஆறாவது இடத்தைப் பிடித்து மூன்றாவது பரிசை வென்றார்.
இருவரும் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்ற சீனா மற்றும் ஜப்பானை பின்னுக்குத் தள்ளினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை 15 தங்கம் உள்பட 70 பதக்கங்கள் வென்றுள்ளது.