பாஜகவை எதிர்ப்பதால் வருமான வரித்துறையினரை வைத்து மிரட்டுகிறார்கள்: திருமாவளவன் குற்றச்சாட்டு

பாஜகவை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்ட பார்கின்றனர்
சிதம்பரம் தொகுதியில் திருச்சின்னபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன்
சிதம்பரம் தொகுதியில் திருச்சின்னபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன்

சிதம்பரம்: பாஜகவை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்ட பார்கின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டினார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் திருச்சின்னபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார்.

சிதம்பரம் தொகுதியில் திருச்சின்னபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?

அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் பாஜகவை எதிர்ப்பவர்களை வருமானத்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ வைத்து ஹோமத் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரை கைது செய்து முடக்கி வருகின்றனர்.

அந்த வகையில் பாஜகவை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்ட பார்கின்றனர். உளவியல் ரீதியாக நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டினார்.

சிதம்பரம் தொகுதியில் திருச்சின்னபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன்
முதல் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் பெண் வேட்பாளர்கள் இல்லை!

பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமானவரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படி சோதனை நடத்தியதாக சான்றுகள் இல்லை. அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.

பிரசாரத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com