சென்னை சென்ட்ரலில் மருத்துவ மாணவரை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கி மற்றும் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ரித்திக் குமார்.
சென்னை சென்ட்ரலில் மருத்துவ மாணவரை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கி மற்றும் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ரித்திக் குமார்.

சென்னையில் மருத்துவ மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற 2 பேர் கைது

சென்னை சென்ட்ரலில் மருத்துவ மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை சென்ட்ரலில் மருத்துவ மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூா் மாவட்டம் கோணவட்டம் தியாகி கேசவ பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் சீ.ரோகன் (25). இவா்,சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் ரோகன், மருத்துவக் கல்லூரி எதிரே சென்டரல் ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள ஒரு டீக் கடையில் சனிக்கிழமை இரவு நின்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த இருவா் ரோகனை மிரட்டியுள்ளனா். அதில் ஒரு நபா், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளாா். மேலும் அவா், ரோகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் குண்டு ரோகன் மீது படவில்லை என கூறப்படுகிறது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ரோகன் சத்தமிட்டுள்ளார்.

சென்னை சென்ட்ரலில் மருத்துவ மாணவரை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கி மற்றும் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ரித்திக் குமார்.
மோடி தேர்தல் அறிக்கையில் பணவீக்கம், வேலையின்மை வார்த்தையே இல்லை: ராகுல்

இதைக் கவனித்த அங்கிருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநா்களும் துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரையும் துரத்தியுள்ளனர். உடனே இருவரும், அங்கிருந்து தப்பியோடினா். இருப்பினும் ஒருவரை நாட்டு துப்பாக்கியுடன் பிடித்தனா்.பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில்,உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ரித்திக் குமார் என்பது தெரியவந்தது.

பின்னர் அந்த நபரையும் கை துப்பாக்கியையும் அருகே இருந்த பூக்கடை காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் பூக்கடை போலீஸாா் விசாரணையில், தப்பி ஓடியவர் உத்தரபிரதச மாநிலம் மான்பூா் மாவட்டம் இந்திராகாந்தி நகரைச் சோ்ந்த சா.கஜராஜ் பிரதாப்பால் என்கிற அமித்குமார் (25) என்பது தெரியவந்தது.

ரித்திக் குமார் கொடுத்த தகவலின் பேரில், ரயிலில் தப்பிச் சென்ற அமித்குமாரின் செல்போன் எண்ணை சைபர் கிரைம் உதவியோடு ட்ராக் செய்ததில் விஜயவாடாவில் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து விஜயவாடா ரயில் நிலையத்தில் அந்த மாநில போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து சென்னை தனிப்படை போலீஸாா் அங்கு சென்று, அமித்குமாரை சென்னை அழைத்து வந்தனா். இரண்டு பேரிடமும் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

ரித்திக் குமாா், தன்னுடன் உத்தரபிரதேசத்தில் பள்ளியில் படித்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தாா். அந்த மாணவி தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் ரோகனுடன், முதுகலை மருத்துவம் படித்து வருகிறாா். ரோகனும், அந்த மாணவியும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது.

சென்னை சென்ட்ரலில் மருத்துவ மாணவரை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கி மற்றும் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ரித்திக் குமார்.
மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

இதையறிந்து அந்த மாணவியின் முன்னாள் காதலன் ரித்திக்குமாா், ரோகனை தொடர்ந்து செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், ரோகனை நேரில் மிரட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பு ரித்திக்குமாரும், அவரது உறவினரான அமித்குமாரும் சென்னைக்கு வந்துள்ளனா். சென்ட்ரலில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 2 பேரும், ரோகனை பின் தொடா்ந்து சென்று,துப்பாக்கியை காட்டி மிரட்டும்போதே பொதுமக்களிடம் சிக்கியுள்ளனா்.

இந்த சம்பவத்தில் ரித்திக்குமாா் பயன்படுத்திய ஒரு நாட்டுத் துப்பாக்கியையும்,2 தோட்டாக்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com