‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

DIN

கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள “மெலடி” என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'ஸ்டார்'. இதில் கவினுடன் லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கெனவே படத்தின் 'வின்டேஜ் லவ்...' பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'மெலடி' என்கிற பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 'மெலடி' என்கிற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பாடலில் மிகவும் வித்தியாசமாக நடிகர் கவின் பெண் கெட்டப்பில் நடனமாடியுள்ளார். கவின் நடிப்பில் கடைசியாக வெளியான 'டாடா' திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் அவரின் அடுத்த படமான 'ஸ்டார்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.