கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்!
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து உபரி நீா் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீா் வந்தது. இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் இருபுறங்களிலும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வாகனங்களும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.