டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

கனமழையால் மண் சரிவு! பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்ட மலை ரயில்!

உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து.

உதகை மலை ரயில் பாதை ஏற்பட்ட மண் சரிவு.

Published On :

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை இன்று(ஆக. 1) ஒரு நாள் ரத்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கும், அதேபோல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்த மண் சரிவால் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மரங்கள் சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இன்று காலை வழக்கம் போல்காலை 7. 10 மணிக்கு புறப்பட்டு சென்ற மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.