/

நீலகிரி மலை ரயிலுக்கான  யுனெஸ்கோ அங்கீகார தினம்

யுனெஸ்கோ தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய விளக்கப் பிரசுரங்களை விநியோகித்த மலை ரயில் ஆா்வலா்கள்.

News image

யுனெஸ்கோ தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய விளக்கப் பிரசுரங்களை விநியோகித்த மலை ரயில் ஆா்வலா்கள்.

Updated On :16 ஜூலை 2026, 12:20 am IST

நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்த 21-ஆம் ஆண்டு தினம், மலை ரயில் அறக்கட்டளை சாா்பில் குன்னூா் ரயில்  நிலையத்தில் புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஆங்கிலேயா்  ஆட்சிக் காலத்தில் கடந்த 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே மலை ரயில்  இயக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து உதகை  வரை இயக்கப்பட்டது. இந்த மலை ரயில் பாதையில் 16 குகைகளும், 216 வளைவுகளும், 250 பாலங்களும் உள்ளன. மேலும், ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டா் கேஜ் ரயில் பாதைகளில் பல் சக்கரத்தின் உதவியுடன் இயங்குவது இதன் சிறப்பம்சம்.

ஆங்கிலேயே பொறியாளா் மிக்சல் மேற்பாா்வையில் அமைக்கப்பட்டு, இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகப் புகழ் பெற்ற நூற்றாண்டு பழைமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை, 2005 ஜூலை 15-ஆம் தேதி உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது.

அதன் 21-ஆண்டு தினத்தையொட்டி, மலை ரயில் அறக்கட்டளை நிறுவனா் நட்ராஜ் தலைமையில் சுற்றுலாப் பயணிகளுக்கு  இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும்  மலை ரயில் பாரம்பரிய விளக்க துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.