மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்று திரும்பிய 3 பேர் விபத்தில் பலி!
சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் பங்கேற்றுவிட்டு மதுரை திரும்பியபோது நடந்த விபத்து.


சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் பங்கேற்றுவிட்டு மதுரை திரும்பியபோது லாரி மீது கார் மோதிய விபத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் மூவர் பலியாகினர்.
சென்னையில் மதிமுக தலைமை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று காரில் மதுரை திரும்பிய மாநில மாவட்ட நிர்வாகிகள் மூவர், மதுரை அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் பலியாகினர்.
மேலும், நிர்வாகியின் மனைவி வளர்மதி மற்றும் பிரபாகர் ஆகியோர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதிமுக கட்சியின் மாநில தலைமை நிலையமான தாயகத்தில் மதிமுக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த மாநில தொண்டரணி அமைப்பாளர் பச்சைமுத்து (50, அவரது சகோதரரும் மதுரை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான அமிர்தராஜ் (37), மதுரை மாநகர் இளைஞரணி அமைப்பாளர் புலிசேகர் (35), மற்றொரு நிர்வாகி பிரபாகர் ஆகியோர் காரில் சென்னைக்கு சென்று, பொதுக்குழுவில் பங்கேற்று மதுரை புறப்பட்டனர்.
அப்போது, உறவினர் வீட்டுக்குச் சென்று, பச்சைமுத்து மனைவி வளர்மதியையும் காரில் அழைத்துவரச் சென்றனர்.
உறவினர் வீட்டில் இரவு உணவை முடித்துக்கொண்டு மதுரைக்கு 5 பேரும் காரில் மதுரைக்கு புறப்பட்டுவந்தனர். காரை பச்சைமுத்து ஓட்டிவந்தார். கார், சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரியின் பின்னாள் பலமாக மோதியது.
இதில் காரானது, லாரியின் அடியில் சிக்கி நசுங்கியது. இவ்விபத்தில் மதிமுக நிர்வாகிகள் மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். வளர்மதி, பிரபாகர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
சுங்கச்சாவடி அருகே நின்றிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, உடனடியாக ஆம்புலன்சில் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
இந்த விபத்துக் குறித்து மேலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துரை வைகோ இரங்கல்
மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மதிமுக நிர்வாகிகள் மறைவை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சி நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு ஊருக்கு திரும்பும்போது இப்படி ஒரு துயரம் நிகழ்ந்து விட்டதே என நினைக்கும்போது மனம் குற்ற உணர்வால் தவிக்கிறது. இவர்களின் இழப்புக்கு நாமும் ஒரு காரணமாகி விட்டோமே என மனம் துடிக்கிறது. அந்தக் குடும்பங்களின் துயரில் பங்கேற்கிறேன்” என்று அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...