‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

வயநாடு சென்ற பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்

வயநாடு சென்ற பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

News image

ஜெய்ராம் ரமேஷ்

Updated On :10 ஆகஸ்ட் 2024, 3:48 pm IST

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இன்று பிரதமர் வயநாடு சென்றுள்ளார். மணிப்பூருக்கும் அவர் சென்றால் நன்றாக இருக்கும்.

தற்போது நடைபெற்று முடிந்துள்ளது சிறிய நாடாளுமன்ற கூட்டத்தொடராகும். பட்ஜெட் தொடர்பான பிரச்னைகள் குறித்து இரு அவைகளிலும் எழுப்பப்பட்டன. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இரு அவைகளிலும் முக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எதிர்க்கட்சியினர் தீவிரமாக இருந்தோம். நாடாளுமன்றத்தில் பொதுமக்களின் பிரச்னைகளை திறமையாக விவாதித்தோம். பத்து ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக மக்கள் வலுவான எதிர்க்கட்சியினரை சந்திக்கிறார்கள். இந்த உண்மையைக் கண்டு அரசு பயப்படுகிறது.

பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை, நாடாளுமன்றத்திற்கு வரும் அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வழங்குகிறார்கள்.

பல்வேறு சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகளை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். அரசாங்கம் யார் சொல்வதையும் கேட்பதில்லை, ஆனால் ராகுல் காந்தி அனைவருடைய பேச்சையும் கேட்கிறார்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.