கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரயில் டிக்கெட் பெற வரிசையில் நிற்க வேண்டாம்.. சேலத்துக்கு வந்துவிட்டது கியூ ஆர் கோடு வசதி!

சேலம் கோட்டத்துக்கு வந்துவிட்டது கியூ ஆர் கோடு வசதி, இதனால், ரயில் டிக்கெட் பெற வரிசையில் நிற்க வேண்டாம்.

News image

ரயில் நிலையம் - கோப்புப்படம்

Updated On :20 ஆகஸ்ட் 2024, 12:06 pm

சேலம்: ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக டிக்கெட் பெறுவதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இனி ரயில் நிலையங்களில் வரிசையில் நிற்காமல், கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது ரயில்வே நிர்வாகம் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, ஊட்டி உள்ளிட்ட 78 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லா டிக்கெட்களை பெறும் வகையில் டிக்கெட் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த புதிய நடைமுறை மூலம் அனைத்து பயணிகளும் டிக்கெட்டுகளை எளிதாக பெற முடியும். இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது. எனவே பயணிகள் அனைவரும் கியூ ஆர் குறியீட்டை பயன்படுத்தி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்த்து ரயில் டிக்கெட்டை எளிதாக பெறலாம் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த புதிய நடைமுறை பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பல்வேறு டிஜிட்டல் கட்டண தளங்கள் மூலமாக ரயில் பயணிகள் தடையற்ற பண ப்பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ளலாம். இந்த புதியமுயற்சியானது கியூஆர் குறியீட்டில் ஸ்கேன் செய்து பணமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குவதன் மூலம், பயணிகள் சிரமமின்றி முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட்டுகளை எடுக்க முடியும்.

இந்த வசதி சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.