
மாரடைப்பு காரணமாக மலையாள திரைப்பட நடிகர் நிர்மல் பென்னி காலமானார். அவருக்கு வயது 37.
நிர்மல் பென்னி நகைச்சுவை நடிகராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். 2012ல் 'நவகதர்க்கு ஸ்வாகதம்' படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். இப்படத்தை களவூர் ரவிக்குமார் எழுத ஜெயகிருஷ்ணா இயக்கியிருந்தார்.
பின்னர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் 'ஆமென்' படத்தில் கொச்சச்சன் (இளைய பாதிரியார்) கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார். நிர்மல் பென்னி இதுதவிர ‘தூரம்’ உட்பட மொத்தம் ஐந்து படங்களில் மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார்.
யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்த இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். இந்த நிலையில் நிர்மல் பென்னி காலமான செய்தியை தயாரிப்பாளர் சஞ்சய் படியூர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
எனது அன்பு நண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது மறைவு குடும்பத்தினரையும், திரைத் துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.