ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மதுரை - செங்கோட்டை ரயில் நேரம் 4 நாள்களுக்கு மாற்றம்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக மதுரை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோப்புப்படம்

Published On :25 ஆகஸ்ட் 2024, 6:42 pm IST

மதுரை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக மதுரை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 26, 27 மற்றும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையேயான ரயில் போக்குவரத்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.20 மணி வரை தடை செய்யப்படுகிறது.

இதனால், மேற்கண்ட 4 நாள்களிலும் செங்கோட்டை- மதுரை பயணிகள் விரைவு ரயில் (06664) செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் தாமதமாக 1 மணிக்குப் புறப்படும்.

ராஜபாளையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு மதுரை சென்று சேரும்.

இதன்படி பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.