
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசின் டான்டீ நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை பகுதியைச் சோ்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ் மேரி, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இவ்வழக்கின் விசாரணையில், டான்டீ நிறுவனம் ஆரம்ப காலத்தில் லாபம் ஈட்டினாலும், கடந்த சில ஆண்டுகளாக இழப்பில்தான் இயங்கி வருகிறது. இதனால், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை டான்டீ ஏற்று நடத்துவது சாத்தியமற்றது என டான்டீ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: திரைப்பட விமர்சனங்களைத் தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய அனைத்து வழக்குகளை இன்று(டிச. 3) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.