வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி!

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி அளித்திருப்பது பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :5 டிசம்பர் 2024, 10:13 am IST

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 21,000 கன அடியாக உள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 3 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 43,000 கனஅடி வரை அதிகரித்து இருந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 21000 கன அடியாக அதிகரித்தது.

இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு கடந்த இரண்டு நாட்களாக விதிக்கப்பட்டு இருந்த தடையை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நீக்கியதை அடுத்து, சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு, மணல்மேடு வரை பரிசல்கள் ஏற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கல் வந்திருந்த சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.

இருப்பினும் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து 3 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வளத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.