ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

களத்தில் நின்று மக்களைக் காக்கும் பணி தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் தளப் பதிவு...

News image
- SWAMINATHAN
Updated On :5 டிசம்பர் 2024, 8:13 am

DIN

களத்தில் நின்று மக்களைக் காக்கும் கட்சியின் பணி தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

”ஃபென்ஜால் புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ அரியலூர் மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் சிவசங்கர் 25,000 உணவுப் பொட்டலங்கள், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் தா.மோ. அன்பரசன் 1 லட்சம் கிலோ அரிசி உள்ளிட்ட உதவிகள், நிவாரணப் பொருள்கள் அண்ணா அறிவாலயம் சார்பில் வழங்கப்பட்டது.

Story image

இன்று சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தோம்.

Story image

மேலும், எனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன். களத்தில் நின்று மக்களைக் காக்கும் கட்சியின் பணி தொடரும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

,ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் இன்று (5.12.2024) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தமிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.