டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் - ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு புதன்கிழமை விவசாயிகள் சாலை மறியல்.

News image
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :11 டிசம்பர் 2024, 8:02 am

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு புதன்கிழமை விவசாயிகள் சாலை மறியல், ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6 ஆயிரமும், புயலால் சேதமைடந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரமும், பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமும், கரும்பு, சவுக்கு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை சாலை மறியல், ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற போது ஆட்சியர் இல்லை. இதையடுத்து ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், வேளான் இணை இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.