நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா உள்ளிட்ட மூவரும் ஜன. 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருமணக் காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அதற்கான டிரைலர் வெளியிடப்பட்டு, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
டிரைலரில் நானும் ரௌடிதான் படக்காட்சி இடம் பெற்று இருந்த நிலையில், உரிய அனுமதியின்றி அக்காட்சியை பயன்படுத்தியதாகத் தெரிவித்து நடிகர் தனுஷ் தனது வழ்க்குரைஞர் மூலம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
தொடர்ந்து, இது தொடர்பாக, நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க: கூலி புதிய அறிவிப்பு!
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் வரும் ஜன. 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு கோரிய மனு மீது ஜன. 8 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்ட விரோத மணல் திருட்டு விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நீா்நிலைகளில் கிராவல் குவாரிகள்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


