காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :13 டிசம்பர் 2024, 8:23 am

DIN

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் கூம்பு வடிவம் மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் வெம்பக்கோட்டைக்கும் வட மாநிலங்களுக்கான வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துவதாக தொல்லியல் துறையில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், மூன்றாம் கட்ட அகழாய்வில் தற்போது கிடைத்துள்ள சூது பவளமணி தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் வடமாநிலமான ராஜஸ்தான் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இது வட மாநிலங்களுக்கான வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.