

எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்தின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்திருந்தார். தற்போது இரண்டாவது பாகத்தில், பார்வதி வெங்கட்ராமன் நடிக்கவுள்ளார்.
இதையும் படிக்க: பிக் பாஸ் 8: தூக்கி வீசிய ஜெஃப்ரி! மருத்துவமனையில் ராணவ்!
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் இருந்த கனிகா, திவ்யதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.
இந்த நிலையில், வரும் திங்கள்கிழமை(டிச. 23) முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னோட்டக் காட்சியும் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.