குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!சிஜேபி போராட்டம்: அபிஜீத் தீப்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிப்பு!

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

இறுதிக்கட்டத்தில் மிஸ்டர் மனைவி தொடர்.

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.

வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் மனைவிக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் என நினைக்கும் கணவனுக்கும் இடையே திருமண வாழ்க்கையில் நடைபெறும் சவால்களே மிஸ்டர் மனைவி தொடரின் மையக்கரு.

முன்னதாக, நடிகை ஷாபானா மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் அஞ்சலி பாத்திரத்தில் நடிகை தேப்ஜானி மொடாக் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார்.

மிஸ்டர் மனைவி தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் டிச. 21 ஆம் தேதியோடு மிஸ்டர் மனைவி நிறைவடைகிறது.

மிஸ்டர் மனைவி தொடர் நிறைவடையவுள்ளது, இத்தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.