
நடிப்பு, இசை என தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஜிவி பிரகாஷ்!
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பு, இசை என தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பு, இசை என தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். 100 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜிவி தென்னிந்திய சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.
சமீப காலங்களில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நிறைய திரைப்படங்களுக்குப் பணியாற்றி வரும் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
அதேநேரம், அவர் தொடர்ந்து கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்தாண்டு தொடக்கம் முதலே நடிப்பு, இசை என தொடர் வெற்றிகளை ஜிவி பிரகாஷ் குவித்து வருகிறார்.
இந்தாண்டில் மட்டும் அவர் 10 படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில், அதில் குறிப்பாக யூத், விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், இருமுடி, மண்டாடி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
அதேபோல, அவரது நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ், இம்மார்ட்டல் போன்ற படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன.
மேலும், இந்தாண்டு சிறந்த பின்னணி இசைக்காக (அமரன்) தேசிய விருதையும் அவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
நடிப்பு, இசை என தொடர்ந்து வெற்றிகளையும் அங்கீகாரத்தையும் பெற்று வரும் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.
Summary
GV Prakash is racking up consecutive successes in both acting and music!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







