
ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசர் வெளியீடு!
கௌதம் ராம் கார்த்திக் நடித்த ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியானது.

கௌதம் ராம் கார்த்திக்
கௌதம் ராம் கார்த்திக் நடித்த ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியானது.
அறிமுக இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’. இது கௌதமின் 19 ஆவது திரைப்படம்.
இப்படத்தில் அஞ்சலி நேத்ரன் நாயகியாகவும் செல்வராகவன், பாக்கியம் சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
சென்னையில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்கள் தொடர்பான அரசியலை மையமாகக் கொண்டு ப்ளடி பாலிடிக்ஸ் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார். படம் அக்டோபர் வெளியீடாக திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
Summary
Teaser of the film Bloody Politics released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







