
கௌதம் ராம் கார்த்திக் நடித்த ப்ளடி பாலிடிக்ஸ் டீசர் அப்டேட்!
ப்ளடி பாலிடிக்ஸ் டீசர் அப்டேட்....

நடிகர் கௌதம் ராம் கார்த்தி நடித்த, “ப்ளடி பாலிடிக்ஸ்” திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் அவரது 19 ஆவது திரைப்படம் “ப்ளடி பாலிடிக்ஸ்”.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் உருவான ”ப்ளடி பாலிடிக்ஸ்” படத்தில் நடிகை அஞ்சனா நேத்ரன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தை டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் கே பாபு தயாரித்துள்ளார்.

சென்னையின் அரசியல் சூழலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை (செப்.12) காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.
The release date for the teaser of the film "Bloody Politics," starring actor Gowtham Ram Karthi, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





