பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார் மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசு

ரோஜா - 2 தொடரில் எதிர்நீச்சல் நடிகை!

ரோஜா - 2 தொடரில் இணைந்த நடிகை ஹரிப்பிரியா.

Published On :

ரோஜா தொடரின் இரண்டாம் பாகத்தில் எதிர்நீச்சல் தொடர் நடிகை ஹரிப்பிரியா இணைந்துள்ளார்.

கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ஹரிப்பிரியா . இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும்கூட. இணையத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

பிரியமானவள் தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என சொல்லலாம். இத்தொடரில் நடித்ததன்மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து கண்மணி தொடரில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார்.

தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹரிப்பிரியா. இத்தொடரில் நகைச்சுவை, நக்கல் கலந்த அவரின் பாத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இத்தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், ரோஜா 2 தொடரில் நடிகை ஹரிப்பிரியா இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக சரிகம தயாரிப்பு நிறுவனம் முன்னதாக தெரிவித்தது. பிரதான பாத்திரங்களில் பிரியங்கா நல்காரி, நியாஸ் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.