2026 ஆம் ஆண்டின் சிறந்த தொடராக எதிர்நீச்சல் தொடர்கிறது தொடர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இயக்குநர் திருச்செல்வம் தனது நாயகிகளுடன் பெற்றுக்கொண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட தமிழக அரசின் விருதுகளில் எதிர்நீச்சல் தொடர் 4 விருதுகளை வென்றிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டுக்கான சிறந்த தொடராகவும் தேர்வாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது (எதிர்நீச்சல் -2) தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் பார்வதி, ஸ்ரீஜா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி, விபு ராமன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள், புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
எதிர்நீச்சல் தொடரின் கதை விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பு செய்யப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கிறது.
கதையில் தொய்வு ஏற்படாமல் இருக்கும் வகையில் புதுப்புது கதாபாத்திரங்களை இயக்குநர் அறிமுகம் செய்து அவர்களின் மூலம் கதையை நகர்த்தி வருகிறார். சிலருக்கு இதில் நாட்டமில்லை என்றாலும், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், சின்ன திரை கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டின் சிறந்த தொடராக எதிர்நீச்சல் 2 தொடர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனை இயக்குநர் திருச்செல்வம் பெற்றுக்கொண்டார். அவருடன் நடிகைகள் கனிகா, பிரியதர்ஷினி ஆகியோர் உடன் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டனர். எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
The best serial of 2026 Ethirneechal-2 Director thiruselvam receives award
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

சிறப்பான கிளைமேக்ஸ்... வினோதினி தொடர் 367 நாள்களுடன் நிறைவு!

இந்த வார இறுதியில் நிறைவடையும் ஆடுகளம் தொடர்!

கெளரி தொடர் நிறைவடையும் தேதி இதுதான்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly




