தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

இந்த வார இறுதியில் நிறைவடையும் ஆடுகளம் தொடர்!

ஆடுகளம் தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக...

News image

ஆடுகளம் தொடர். - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :13 ஜூலை 2026, 3:38 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.

நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரில் அவருக்கு ஜோடியாக சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார்.

மேலும், இந்தத் தொடரில் காயத்ரி ஜெயராம், சச்சு, காத்தாடி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கடந்தாண்டு ஏப். 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆடுகளம் தொடர் இரவு நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்னர் நான் பிரைம் எனப்படும் மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சூழலில், ஆடுகளம் தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்தத் தொடர் வரும் ஜூலை 18 ஆம் தேதி சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

ஆடுகளம் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 1 ஆண்டு முடிந்த நிலையில், குறுகிய காலத்தில் நிறைவடையவுள்ளது, இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஜோவிதா லிவிங்ஸ்டன் நடிக்கும் புதிய தொடரான சிறகுகள் தொடர் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. லட்சுமி தொடர் 2.30 மணிக்கும் இரு மலர்கள் தொடர் பிற்பகல் 3 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

The serial Aadukalam, currently airing on Sun TV, concludes this weekend.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.