முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

serial

காதல் காதல் காதல் தொடர் - படம்: விடியோ கிளிப்

Published On :3 செப்டம்பர் 2026, 3:26 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே தொடரில் 3 காதல் கதைகளை மையப்படுத்தி, வித்தியாசமான பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

மூன்று மகன்களின் காதலை எதிர்க்கும் தந்தையை பிரதானப்படுத்தியும், மாறுபட்ட மூன்று ஜோடிகளின் காதல் கதையை விவரிக்கும் கதையாகவும் இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்து பிரபலமான அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மலையாள சின்ன திரை நடிகர் நலீஃப் கியா ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.

முத்தழகு தொடர் நாயகி ஷோபனா, அண்ணா தொடரில் நடித்து பிரபலமான சுசித்ரா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கமகள் தொடரில் நடித்த மனுஸ்ரீ கார்த்திகேயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும், 3 மகன்களுக்கு தாயாக, பாக்கியலட்சுமி தொடர் சுசித்ராவும், தந்தையாக, ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் சந்திரசேகரும் நடிக்கிறார்கள்.

காதல் காதல் காதல் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, செப். 6 ஆம் தேதி முதல் பிக் பாஸ் - 10 நிகழ்ச்சி தொடங்கவுள்ளதால், தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தாய் மாமன் தொடர் மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காதல் காதல் காதல் தொடர் செப். 7 ஆம் தேதி முதல் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

The broadcast time of the serial Kadhal Kadhal Kadhal, currently airing on Vijay TV, has been changed once again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.