புயல் சின்னத்தால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை!

புயல் சின்னத்தால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை.
Published on

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடும் தமிழ்நாடு வெதர்மென் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் மழை தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

நகர் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. அடுத்து, மிதமான மழைமேகக் கூட்டங்கள் நகருக்குள் நுழையத் தொடங்கும். இதனால் லேசான மழையே பெய்யும்.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை(டிச. 19) காலை/மதியம் தமிழக கடற்கரையில் இருந்து நகரும்போது மழை குறையத் தொடங்கும்.

இந்த காற்ற்ழுத்த தாழ்வுப் பகுதியால் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com