
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், தன் தந்தையைத் தாக்கியதற்காகவும் அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
அர்ஜுன் ரவி (வயது-25) கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று இரவு சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா எனும் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது செல்போனில், அர்ஜுன் தப்பிச் செல்வதற்குள் படம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரைக் கண்டுப்பிடித்த சிங்கப்பூர் காவல்துறையினர் கடந்த மே 10ஆம் தேதியன்று அவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால், அர்ஜுன் கதவைத் திறக்காமல் வீட்டிற்குள் இருந்த அவரது 64 வயதுடைய தந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு மூக்கு உடைந்தும் பல இடங்களில் பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் கதவருகே காவல்துறையினர் காத்திருந்தபோது நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர், அர்ஜுனைக் கைது செய்த போலீஸார் அவரது தந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (டிச.20) பெண்னை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் தந்தையைத் தாக்கியது என இருவழக்கிலும் அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 1 ஆண்டு 5 மாதம் 6 வார காலத்திற்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.