
தென் கொரியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் நேற்று (டிச.21) அமெரிக்க விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம் தென் கொரியாவின் 3 வது ராணுவச் செயற்கைக்கோள் தென்கொரிய நேரப்படி நேற்று இரவு 8:34 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க: வணிக வளாகத்தினுள் புகுந்த வாகனம்: 5 பேர் படுகாயம்!
வட கொரியாவை கண்காணிக்க சிறியது முதல் பெரியது வரையிலான ஐந்து செயற்கைக்கோள்களை 2025 ஆம் ஆண்டின் முடிவிற்குள் விண்ணில் ஏவ தென்கொரியா திட்டமிட்டுள்ளது.
இதில் ஏற்கனவே இரண்டு செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், மூன்றாவது ராணுவச் செயற்கைக் கோள் சோதனை முயற்சியும் வெற்றியடைந்துள்ளது.
முன்னதாக, தென் கொரியா செயற்கைக்கோள் சார்ந்த உதவிகளுக்கு அமெரிக்காவை முழுவதுமாக சார்ந்து இருந்த நிலையில், தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோளை அமெரிக்காவின் உதவியோடு விண்ணில் செலுத்தி வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.