

ஜப்பான் நாட்டின் கடல்பகுதியில், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இன்று (ஜன. 27) வட கொரியா சோதனை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தலைநகர் சியோல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் கிழக்கு கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக, தென் கொரிய ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேபோல், 2 பாலிஸ்டிக் ஏவுகணைக் கண்டறிந்ததாகவும், அவை ஏற்கெனவே கடலில் விழுந்திருக்கக் கூடும் எனவும் ஜப்பானின் கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது.
இந்தச் சோதனையானது துல்லியமான தாக்குதல் திறன்களை மேம்படுத்துதல் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு சவால் விடும் நோக்கில் அமைந்துள்ளதாவும், ஆயுதங்கள் அனைத்தும் ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முன்பு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே, ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் தென் கொரியாவின் அதிபர் சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த சூழலில் வட கொரியா ஏவுகணைகளைச் சோதனைச் செய்திருந்தது பெரும் பேசுபொருளானது.
கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏவுகணைகளின் உற்பத்தியில் அதிகம் கவனம் செலுத்தி வரும் வட கொரியா அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சோதனைகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.