அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!
பகல் 1 மணி வரை சென்னை, புறநகரில் மழை


அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்த இந்த புயல் சின்னம், தற்போது மீண்டும் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(பகல் 1 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...